கர்நாடகா அரசு மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள யார்கோல் அணையில் மதகுகள் அமைத்து, தமிழகத் திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் விவசா யிகள், கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணா மலை, கள்ளகுறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் வாழ்வாதரமாக விளங்கும் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது என கடந்த 2011-ம் ஆண்டு நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தோம். பல முறை மனுக்கள் கொடுத்தோம்.
அணையின் கட்டுமானங்களைபடம் பிடித்து அதிகாரபூர்வமாக அன்றைய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு ஆவணங்கள் கொடுத்ததின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. இவ்வழக்கை சரியாக கையாளப்படாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசு கோலார் தங்கவயல் மாவட்டத்தில் தமிழக எல்லையான யார்கோல் என்னும் இடத்தில் அணையை கட்டி முடித்துள்ளது. 100 ஆண்டுகளில் சராசரியாக வருகிற நீரை விட 2 மடங்கு பெரி தாக அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மேற்கண்ட மாவட்டங்கள் வறண்டு போகும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, விவசாயத்தை காப்பாற்ற அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். குடோன் போல கட்டப்பட்டுள்ள இந்த அணையில், மதகுகள் பொருத்தி, தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago