மூன்றாம் பாலினத்தவருக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கல் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, 50-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி பேசும்போது, ‘‘அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற மூன்றாம் பாலினத்தவர்கள் மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அவர் களுக்கான உறுப்பினர் அட்டை வைத்திருக்க வேண்டும்.

இந்த அடையாள அட்டைகள் இருந்தால் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். மூன்றாம் பாலினத்த வர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதில், கலந்து கொண்டு மூன்றாம் பாலினத்தினர் பயன்பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயன், வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்ணன், நடராஜன், காஞ்சனா, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்