சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் :

சிதம்பரம் அடுத்து உள்ளது சி.தண்டீஸ்வரநல்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஓமகுளம்,ஜமால் நகர், வடக்கு தெரு, சிவஜோதி நகர், தாயுமானவர் நகர், செல்வக்கணபதி நகர், ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் வந்து கொண்டிருந்தது.

தற்போது அதுவும் நிறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதிமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், குமராட்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத் திற்கு தகவல் தெரிவித்து, 20 நாட்க ளுக்குள் போர்வெல் அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரையிலும் லாரிகள் மூலம் தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்