விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் 30 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.30 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
"நிர்பயா நிதி" மூலம் பெண்களுக்கான உதவி மையம் அமைக்க மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.8 கோடி அளித்துள்ளது. இதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க தமிழகம் முழுவதும் 800 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி, விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி வளாகத்தில் எஸ்.பி. மனோகர் தலைமையில் நடை பெற்றது. சென்னையில் இருந்து காணொலி மூலமாக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் இதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago