தஞ்சாவூர் விளார் சாலையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த 2 டன் ரேஷன் அரிசி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் விளார் சாலை அண்ணாநகர் 8-வது தெருவில் உள்ள துரைராஜ் என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தஞ் சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜன், புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் நேற்று துரைராஜ் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப் பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்த்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்த் துறை போலீஸார், துரைராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago