குமரி மலைப்பகுதியில் நீடிக்கும் மழை :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று பாலமோரில் 9.6 மிமீ மழை பெய்தது. சிவலோகத்தில் 6 மிமீ, முள்ளங்கினாவிளையில் 4 மிமீ மழை பதிவானது. மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை நீர்மட்டம் 44.68 அடியாக உள்ள நிலையில்,அணைக்கு 764 கனஅடி தண்ணீர்வருகிறது. அணையில் இருந்து506 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.67 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 513 கனஅடிதண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கான நீர்வரத்தை பொதுப் பணித்துறை நீர்ஆதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருகிறது. பருவமழைக் காலத்தில் பெரும்பாலான நாட்கள் வறண்ட வானிலையே நிலவியது. கடந்த 2 நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் குண்டாறுஅணையில் 4 மி.மீ., செங்கோட்டையில் 3, தென்காசியில் 2.60, அடவிநயினார் அணை, ஆய்க்குடியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது.

குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 69.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 63.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 62.67 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 118.50 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்