மாவிவசாயிகளை காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் : பாஜக கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் பாஜக கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நடந்தது.

மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் எண்ணெகொல்புதூர் அருகே கடந்த ஆட்சியில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு பூமி பூஜை நடந்து, அத்திட்டம் கிடப்பில் உள்ளது. கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வெட்ட வேண்டும்.

இத்திட்டம் நிறைவேறினால், இப்பகுதியில்உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதுடன், குடிநீர் பிரச்சினையும் தீரும். எனவே இத்திட்டத்தை போர்க் கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய தொகுதிகளில், அதிக அளவு மாம்பழம் விளைகிறது. வறட்சியாலும், இயற்கை சீற்றங்களாலும் மா விளைச்சல் பாதிப்படைந்தும், மா விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காததாலும், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆகவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மா விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

பிரதமரின் முயற்சியால் அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசியும், மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ரேஷன் கடையில் இலவச அரிசியும் வழங்குவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்