ராமநாதபுரம் மாவட்டம், திரு வாடானை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருவாடானை அருகே வட்டானம் ஊராட்சியைச் சேர்ந்தது தாமோதரன்பட்டினம். மீனவக் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள், தங்களது கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மீனவர்களுடன் சிஐடியூ மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, சிஐடியூ கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தாமோதரன் பட்டினம் ஊராட்சி துணைத் தலைவர் எம்.அய்யப்பன் கூறிய தாவது:
எங்கள் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மக்களின் அமை தியான வாழ்வுக்கு டாஸ்மாக் கடை இடையூறாக உள்ளது. ஏற்கெனவே மனு அளித்தும் கடையை அகற்ற நடவடிக்கை இல்லை. கடையை நிரந்தரமாக அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago