பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.சுகுமாரன் தலைமை வகித்தார்.
இதில், 2021-21-ம் ஆண்டு மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் இதுவரை வழங்காததால், விவசாயிகளின் உடலில் சக்தி இல்லாததை சுட்டிக்காட்டும் விதமாக, தாங்களாகவே குளுக்கோஸ் ஏற்றிக்கொள்வதாக பாவித்து, மருத்துவ உபகரணங்களை கைகளில் வைத்துக்கொண்டு, கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டனர்.
மேலும், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். இதை மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago