தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கோ.அரவிந்தசாமி தலைமையில், துணைத் தலைவர் பிரபாகரன், மாநகரத் தலைவர் சிரில் இமான், மாநகரக் குழு உறுப்பினர் அர்ஜூன் உள்ளிட்டோர் நேற்று அளித்த கோரிக்கை மனு:
கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழ்நிலையில்கூட, தனியார் பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்களிடம் பணம் கட்டச் சொல்லி தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றன. மேலும், அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்து வருகின்றன. எனவே, இதை உடனடியாக கண்காணித்து, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, சில அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago