விலை நிர்ணயம் தொடர்பான பிரச்சினையில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் - நீலகிரியில் தேயிலைத் தூள் உற்பத்தி மீண்டும் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் மாதாந்திர விலை பிரச்சினை காரணமாக தொழிற்சாலைகளில் தேயிலை வாங்குவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால், மீண்டும் அனைத்து தொழிற்சாலைகளிலும் தேயிலைத் தூள் உற்பத்தி தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 65ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்ட்கோசர்வ் கீழ் 16 தேயிலைத் தொழிற்சாலைகளும், 180 தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளும் செயல்படு கின்றன. சிறு, குறு விவசாயிகள், தங்களது தோட்டங்களில் பறிக்கும்தேயிலைக்கு வாரம் அல்லது மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை பெற்று வந்தனர். இந்த விலை தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததால், தேயிலை வாரியம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தேயிலை வாரியம் நிர்ணயம் செய்யும் விலையை, தங்களால் கொடுக்க முடியவில்லை என்றும்,மாத இறுதியில் விலை நிர்ணயம்செய்ய வேண்டும் எனவும் தேயிலை வாரியத்திடம் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதனிடையே ஜூன் மாதத்தில்தேயிலைத் தூளுக்கு விலை குறைந்த நிலையில், தேயிலைக்கும் விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

தேயிலை வாரியம் அறிவிக்கும் விலையை, பசுந்தேயிலைக்கு வழங்க முடியாது என்றும், இதன் காரணமாக நஷ்டம் ஏற்படும் எனவும் கூறி நீலகிரி மாவட்டத்தில் 90 தேயிலைத் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. இதனால், தேயிலை விவசாயிகள் பறிக்கும் இலையை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யாததால், பசுந்தேயிலை வீணாகி, விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.

இப்பிரச்சினை குறித்து தேயிலைத்தொழிற்சாலை உரிமையாளர்களு டன் பேசி தீர்வு காண வேண்டும்என விவசாயிகள் வலியுறுத்தினர். இதன்பேரில், தேயிலை வாரிய அதிகாரிகள், தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாத இறுதியில் விலைநிர்ணயம் செய்ய,தேயிலை வாரியம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைத்து தேயிலைத்தொழிற்சாலைகளிலும், பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு, மீண்டும்தேயிலைத் தூள் உற்பத்தி தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்