முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் ஐடியா லேப் தொடங்க ஏஐசிடிஇ அனுமதி :

By செய்திப்பிரிவு

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில், ஐடியா லேப் தொடங்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அனுமதித்துள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்களின் புதுமையான செயல் திட்டங்களை ஊக்குவித்து அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் செயல்படும் ஐடியா லேப் தொடங்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் இந்திய அளவில் 49 பொறியியல் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது. இதில், தமிழக அளவில் தேர்ந்தெடுத்த 5 பொறியியல் கல்வி நிறுவனங் களில், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியும் ஒன்றாகும்.

வாரத்தின் அனைத்து நாட் களிலும் 24 மணிநேரமும் செயல்பட உள்ள இந்த ஆய் வகம் மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் பெறும் அனுபவங்களை செயல் வழி கற்றல் மூலம் தங்கள் கல்லூரியி லேயே பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப் பட்டுள்ளது. அறிவியல், கணிதம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படை கருத்துக்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆய்வகம் அமையும்.

மேலும், இந்த ஆய்வகம் மாணவர்கள் வருங்காலத்தில் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் தங்களை கற்பனைத்திறனோடு புதுமைகளை உருவாக்கும் திறன்மிக்க பொறியாளர்களாக உருவாக்கிக்கொள்ள உறு துணையாக அமையும். ஆய்வகம் கல்லூரியில் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து ராசிபுரம் முத்தாயம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் தாளாளர் ஆர்.கந்தசாமி, செயலாளர் முனைவர் கே.குணசேகரன், இணைசெயலாளர் ஜி.ராகுல் ஆகியோர் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்