திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு ஊராட்சி தலைவராக இருப்பவர் வெங்கடேசன்(40). இவர், பட்டியலினத்தை சேர்ந்த தன்னை முன்னாள் தலைவரான நாகராஜ் பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்வதோடு, சாதி பெயரை சொல்லி தரக்குறைவாக பேசி வருவதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று தொடுகாடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப் பிறகு ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்ததாவது: தொடுகாடு ஊராட்சி தலைவர் வெங்கடேசனை, முன்னாள் தலைவர் நாகராஜ் இழிவாக பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளது. அதன் உண்மை தன்மை குறித்தும், வெங்கடேசனின் புகார்குறித்தும் விசாரணை செய்து, வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago