கரும்பு விலை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பொதுச் செயலாளர் ரவீந்திரன் , பொருளாளர் கோபிநாத் ,மாநில நிர்வாகிகள்பழனிசாமி, சக்திவேலு, காசிநாதன், ஜோதிராமன், தென்னரசு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற தேர்தலின் போது ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. இது கரும்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் 2021-22 பருவ கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 அறிவித்து மாநில அரசு வழங்கிட‌ வேண்டும். 2020-21 ல் அரவை செய்த கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் டன்னுக்கு ரூ.2707.50 மட்டுமே தருகிறார்கள்.மாநில அரசு ஊக்கத்தொகையாக ஒரு டன் கரும்புக்கு ரூ.142.50 நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.

2020-21 நடப்பு பருவத்தில் அரைத்த கரும்புக்கு தனியார், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உடனடியாக பண பாக்கியை வழங்க வேண்டும். கரும்பு விலை நிர்ணயம் செய்திட முத்தரப்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்