காஞ்சிபுரத்தில் மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.
தீர்வுத் தொகைக்கான உத்தரவு நகலையும் அவர் வழங்கினார். தொழிலாளர் நீதிமன்றநீதிபதி சிவஞானம் முன்னிலைவகித்தார். சட்டப் பணிகள் குழுவின் தலைவர் திருஞானசம்பந்தம் வரவேற்றார். மக்கள் நீதிமன்றத்தில் 432 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 288 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ.2 கோடியே 55 லட்சம் தீர்வுத்தொகையாக வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடக்க விழாவில் முதன்மை மாவட்ட உரிமையில் நீதிபதி ராஜேஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், நீதிபதிகள் செந்தில்குமார், சரவணக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago