கடலூரில் கடலில் அனுமதியை மீறி - இழுவலை பயன்படுத்தி மீன் பிடித்ததால் வலை பறிமுதல் : மீன்வளத் துறையினர் நடவடிக்கை

கடலூரில் அனுமதி மீறி கடலில் இழுவலையினை பயன்படுத்தி மீன் பிடித்த வலை மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் 49 மீனவகிராமங்களில் சுமார் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, விசைப்படகு வகைகளான எஸ்டிபி, ஐபி போன்ற மீன்பிடி படகுகளில் முறையான ஆய்வு செய்து மீன்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மீனவ கிராம பிரதிநிதிகள் மனு அளித்தும்,போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர்.

இதையடுத்து எஸ்டிபி, ஐபி வகை மீன்பிடிப் படகுகள் கடலூர் துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் (கடல் மைல்) தூரத்திற்குள் மீன் பிடிக்கக் கூடாது. 240 குதிரைத்திறனுக்கு கீழ் உள்ள இன்ஜின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீன்பிடி வலைகளின் கண் அளவு 40 மில்லி மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இதனை மீறி இழுவலையினை பயன்படுத்தி மீன்களை பிடித்தால் வலை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கடலூர் மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் கொண்ட குழு நேற்று காலை கடலூர் துறைமுத்தில் இருந்து கடலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியை மீறி இழுவலையினை பயன்படுத்தி 5 நாட்டிக்கல்லுக்கு உள்ளே மீன்களை பிடித்தி கொண்டிருந்து ஒரு படகை கடலில் மடிக்கி பிடித்து துறைமுகத்திறக்கு கொண்டுசென்றனர். பின்னர் இழுவலைமற்றும் மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் படகின் உரி மையாளரான அக்கரைகோரியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்த மீன்களை துறைமுத்திலே ஏலம் விட்டனர். அது ரூ. 2 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

மாவட்டத்தில் அனுமதிக்கப் பட்ட வலையினை மட்டுமே பயன்படுத்தி மீனவர்கள் 5 நாட்டிக்கல் மேல் தான் மீன்களை பிடிக்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மீன்வளதுறை உதவி இயக்குநர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்