அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - சிவகங்கை மாவட்டத்தில் பாட நூல்களுக்கு பற்றாக்குறை :

By செய்திப்பிரிவு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் பாடப் புத்தகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று மாணவர்களுக்குப் பரவுவதை தடுக்க பள்ளிகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்கின்றனர். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கரோனா ஊரடங்கால் வேலையிழந்த பலர் தனியார் பள்ளிகளில் பயின்ற தங்களது குழந்தைகளை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கெனவே பயின்றுவரும் அரசு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட் டுள்ளன. அவை தற்போது இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதே நேரம் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க பாடப்புத்தகங்கள் இல்லாத நிலை உள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக பள்ளிகளில் இருந்து தேவை பட்டியல் பெற்று வருகிறோம். அதனை அரசுக்கு அனுப்பி கூடுதல் பாடப்புத்தகங்கள் பெற்று மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் https://www.tntextbooks.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் மாணவர்கள் தங்களுக்கான பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்