திருச்செந்தூரில் இருந்து உவரி,நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு புதிய வழித்தடங்களில் 5 பேருந்துகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதிய வழித்தடங்களில் பேருந்துகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பேசும்போது, “திருச்செந்தூரில் இருந்து காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி,தாண்டவன்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, குட்டம் வழியாகஉவரிக்கு ஒருபேருந்து வசதியும்,திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி,மணிநகர், தட்டார்மடம், திசையன்விளை, வள்ளியூர் வழியாகநாகர்கோவிலுக்கு 2 பேருந்துகளும், திருச்செந்தூரில் இருந்துகுலசேகரன்பட்டினம், உடன்குடி,பெரியதாழை, உவரி, கூடங்குளம், அஞ்சுகிராமம் வழியாககன்னியாகுமரிக்கு 2 பேருந்துகளும் புதிய வழித்தடத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பெரியதாழை மக்களின் கோரிக்கையை ஏற்று பெரியதாழையில் இருந்து அழகப்பபுரம், படுக்கப்பத்து, அழகம்மாள்புரம், தாண்டிபுரி, சுண்டன்கோட்டை, தங்கையூர் வழியாக உடன்குடிக்கு நகரப்பேருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, உடன்குடி ஒன்றியம் நயினார்பத்து ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் ரூ.9.08 லட்சம் மதிப்பில்கட்டப்பட்ட அங்கன்வாடி புதிய கட்டிடம், ரூ.17.64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற புதிய கட்டிடம்,ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் தொட்டி மற்றும்மானாடு தண்டுபத்து கிராமத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், நயினார்பத்து ஊராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், கோட்டாட்சியர் கோகிலா, வட்டாட்சியர் முருகேசன், அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாண்மை இயக்குநர் ராஜேஷ்வரன், பொது மேலாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago