திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ளநீதிமன்றங்களில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 870 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.9.47 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
திருநெல்வேலியில் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஏ. நசீர் அகமது தொடங்கி வைத்தார். நீதிபதிகள் எஸ்.சமீனா, ஏ.தீபா,ஏ.பிஸ்மிதா, சுப்பையா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எம்.அமிர்தவேலு, நீதித்துறை நடுவர் அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மொத்தம் 1,546 வழக்குகள்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 726 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5,69,53,184 வழங்க உத்தரவிடப்பட்டது.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்டநீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான அருள்முருகன் தொடங்கி வைத்தார்.விசாரணைக்கு 300 வழக்குகள் எடுத்துகொள்ளப்பட்டு, 64 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இழப்பீட்டு தொகையாக ரூ.3 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 407 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாயகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி ராமலிங்கம், கூடுதல் சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா, வழக்கறிஞர் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மொத்தம் 219 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.வங்கி வராக்கடன் தொடர்பான 5 வழக்குகளில் ஒரு வழக்குக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 30,000 வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ள 214 வழக்குகளில் 79 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 61 லட்சத்து 45 ஆயிரத்து 238 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் மாவட்ட முதன்மை நீதிபதி சி.குமார் சரவணன் கலந்து கொண்டு, முடிக்கப்பட்ட வழக்குகளுக்கான ஆணையை வழங் கினார்.
நீதிபதி உமா மகேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வகுமார், சார்பு நீதிபதி பிரீத்தா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. பாஸ்கர், நீதித்துறை நடுவர்கள் உமா தேவி, ராஜ குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago