ஆரணியில் தன்னார்வலர்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் மேலும் 7 கண்காணிப்பு கேமராக் களின் செயல்பாடுகளை காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தொடங்கி வைத்தார்.
தி.மலை மாவட்டம் ஆரணிநகரம் காந்தி சாலை, மார்க்கெட் சாலை, அண்ணா சிலை, புதியமற்றும் பழைய பேருந்து நிலையங்கள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், குற்றச் சம்பங் களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை விரிவுப்படுத்த வணிகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒத்துழைக்க காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர். அதன் பேரில், போளூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே 4 கண்காணிப்பு கேமராக்கள், சைதாப்பேட்டை பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவினர்.
இதையடுத்து, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகளை காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தொடங்கி வைத்தார்.
இதில், காவல் ஆய்வாளர் சுப்ரமணியன், உதவி ஆய்வாளர் கள் ரகு, வெங்கடேசன், பழனிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago