உளுந்தூர்பேட்டை அருகே சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை வட்டம் கிழக்குமருதூர் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) நகரச் செயலாளர் காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுடுகாட்டு பாதைக்கு செல்லும் வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய சார்சாலை அமைத்து தர வேண்டும். குடிநீருக்கு பயன்படுத்திய பழுதடைந்த மினி சின்டெக்ஸ் டேங்குகளை சீர்செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

குண்டும் குழியுமாக உள்ள சிமென்ட் சாலையை சரிசெய்ய வேண்டும்.தெருக்களில் தண்ணீர் தேங்கி நோய்கள் வரும் அபாயம் உள்ளதால், தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க கால்வாய் அமைக்க வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு மாதம் ரூ 7,500 குறைந்தது 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும்.பெட்ரோல்,டீசல் விலை உயர்வை திருப்பப் பெறவேண்டும். நுண் நிறுவனக் கடன், மாணவர்களின் கல்விக் கடன், விவசாயிகள் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் கந்தசாமி, ஏழுமலை, ஆறுமுகம் மற்றும் கலாமணி, பாலமுருகன், ராதா, மணிகண்டன், ஐய்யப்பன், அன்பு செல்வன், ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்