தொழில் திறன் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக, இளைஞர்களிடையே திறன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொழில் திறன் விழிப்புணர்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2-வது வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி நிகழாண்டில் கரோனா நோய் தடுப்பு விதிமுறை களை பின்பற்றி, தொழில் திறன் விழிப்புணர்வு நிகழ்வுகள் இணையதளம் மூலம் நடத்தப்பட உள்ளது. அதன்படி வருகிற 12-ம் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கும், 13-ம் தேதி மகளிருக்கும், 14-ம் தேதி மூன்றாம் பாலினத்தவருக்குமான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதே போல் வருகிற 14-ம் தேதி முன்கற்ற பல்வேறு தொழில்நுட்பம் அறிந்தவர்களில் உரிய சான்றுகள், இல்லாதோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 16-ம் தேதி தொழிற்பயிற்சி பயிலும் மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் மூலமாக சுயவேலைவாய்ப்பு ஆலோசனை, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம், தொழிற்பழகுநர் பயிற்சி, மெய்நிகர் கற்றல் வலைதளம் குறித்த தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக நடத்தப்படுகிறது.
மேலும், தேசிய திறன் தினமான 15-ம் தேதி, இணையதளம் வாயிலாக திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு, வேலைவாய்ப்புகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு இணையம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புப வர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை 94990 55946 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு இணையதளம் www.tnskill.tn.gov.in மூலம் விவரங்களை அறிந்து கொண்டு, திறன் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago