சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

செங்கம் அருகே சரக்கு லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வேம்பூர் பகுதியில் வசிக்கும் 20 பேர், பெங்களூருவில் கூலி வேலை செய்வதற்காக சரக்கு லாரி மூலம் நேற்று அதிகாலை புறப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் வந்தபோது, சரக்கு லாரி மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த வேம்பூர் கிராமத் தைச் சேர்ந்த சுப்ரமணி(48) என்பவர் உயிரிழந்தார். மேலும், வேன் ஓட்டுநர் சக்தி(36) மற்றும் தொழிலாளர்கள் சாந்தி(36), அலெக்ஸ்(37), அபிஷேக்(31), சிவராமன்(18), வேலாயுதம்(40), குப்பாய்(37), விகாஷ்(20), ரமேஷ்(37), சரத்குமார்(14), ஆறுமுகம் (50), அன்பழகன்(36), கிருஷ்ணவேனி(12), ஏழுமலை (50), புகழேந்தி(27), குமார்(62)உள்ளிட்ட 17 பேர் காய மடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மேல்செங்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கம் மற்றும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேல்செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் வந்தபோது, சரக்கு லாரி மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்