திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், ஊரகப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ரூ.70.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் சுய உதவிக் குழு கட்டிடத்தையும், ரூ.2.13 லட்சம் மதிப்பில் அரசுப் பணியாளர் நகரில் மியாவாக்கி முறையில் அடர்ந்த மரக்கன்றுகள் நடும் பணியையும் மாவட்ட ஆட்சியர்சு.வினீத் ஆய்வு செய்தார்.
மேலும், ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி அலுவலகம், தளவாய்ப்பட்டினம் ஊராட்சி நரசிங்கபுரம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.15.47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் இரண்டு வகுப்பறைகள் என ரூ.1.11கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ்பெறப்பட்ட மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த்மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசுஅலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago