நீலகிரி மாவட்டத்தில் கரோனா 2-ம் அலை காரணமாக, தொற்றாளர்களின் எண்ணிக்கை 589 என்ற உச்சத்தை தொட்டது. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல குறைந்தது. இந்நிலையில், கடந்த 29-ம் தேதி 75-ஆக குறைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஊரடங்கு தளர்வுக்கு பின் நாளுக்கு நாள் உயர்ந்து, நேற்று 125-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் நோய் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 126-ஆக இருந்தது. தற்போது 858 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 29,112 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடி வருவதால், மீண்டும் தளர்வுகள் நீக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago