பல்லடம் உழவர் சந்தை இயங்கும் நேரத்தில் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபடுவதாக புகார் :

பல்லடம் உழவர் சந்தை இயங்கும் நேரத்தில் வியாபாரிகள் விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் எம்.ஈஸ்வரன் மற்றும் விவசாயிகள், பல்லடம் வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் காவல் துணைக் கண் காணிப்பாளர் ஆகியோரிடம் நேற்று அளித்த மனுவில், "பல்லடம் உழவர் சந்தை விற்பனை நேரத்தில் விவசாயிகள் காய்கறி, கனி விற்பதற்கு இடையூறாக, என்.ஜி.ஆர். சாலையில் சில்லரை காய்கறி விற்பனையாளர்கள் விற்பனை செய்வதால், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் காய்கறி மற்றும் கனி விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

உழவர் சந்தை சட்ட விதிகளின்படி, காலை 4 முதல் 8 மணி வரை வியாபாரிகள் விற்கக்கூடாது என அரசு விதி உள்ளது. ஆனால், அதை மீறி என்.ஜி.ஆர். சாலையில் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் பொருட்களை விற்க முடியாமல் கால்நடைகளுக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE