பில்லுமலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு :

By செய்திப்பிரிவு

பில்லுமலை அடிவாரத்தில் நீரோடை கால்வாய் ஆக்கிரமிப் பினை அகற்றக்கோரி, கிருஷ்ணகிரி எம்பி டாக்டர்.செல்லக்குமார் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் மனு அளித்தார்.

இதுதொடர்பாக அவர் அளித் துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேகுளி ஊராட்சிக்கு உட்பட்ட பில்லுமலை அடிவாரத்தில், 2005-06-ம் ஆண்டு தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 5 ஏக்கர் நில பரப்பளவில் ஏரி அமைக்கப்பட்டது.

மேலும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 140 அடி அகலமுள்ள தென்பெண்ணை ஆறு இணைக்கும் நீரோடை கால்வாய் இருந்ததை தற்போது தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மேற்கண்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகையால், தாங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட ஏரி மற்றும் 140 அடி அகலம் உள்ள நீரோடையை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்