மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை தொடர்பான வழக்கில், அப்போதைய அதிமுக அரசு உச்சநீதி மன்றத்தில் வாய்தாவிற்கே செல்லவில்லை என முன்னாள் எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.செங்குட்டு வன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மார்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக திமுக ஆட்சி யில் கர்நாடகத்திலே பேச்சு வார்த்தை நடந்தது உண்மை. ஆனால் 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அணை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சென்றதால் அப்பணி அப்படியே நின்று போனது. 2013-ல் அணையை கட்ட ஆரம்பித்தபோது, சட்டப் பேரவையில் தெரிவித் தோம்.
இதன் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடகாவிற்கு நோட்டீஸ் அனுப்பினார். மேலும், திமுக ஆட்சியில் தொடர்ந்த வழக்கோடு தமிழக அரசு தங்களையும் இணைத்துக் கொள்கிறார்கள்.
வழக்கில் இணைத்துக் கொண்டார்களேதவிர, 2019-ல் அந்த அணை குறித்து தீர்ப்பு வரும்வரை வழக்கிலே முறையாக வழக்கறிஞரை வைத்து வாதிடுவதிலே அந்த அரசு முற்றிலும் தவறிவிட்டது. உச்சநீதிமன்றத்திற்கு வாய் தாவிற்கே செல்லவில்லை. 2019-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இவ் வழக்கில் தமிழகத்தின் பக்கம் நியாயம் உள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் முறையாக வாதிட வில்லை.
அதனால் எதிரணிக்கு சாதகமாகவே வழங்கப் பட்டுள்ளது.
தமிழகம் நடுவர் மன்றத்தை நாடவேண்டும் என்று கூறியுள்ளார். 2011-ல் அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, ஏன் இதுகுறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முறையாக வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதாடியிருந்தால் நிச்சயம் நாம் வெற்றி பெற்றிருப் போம்.
மார்கண்டேய நதியின் குறுக்கில் அணை கட்டுவதற்கு காரணம் அதிமுக அரசுதான். அணை கட்டுவற்கு ஜல்லியும், எம் சாண்ட் மணல் கொடுத்ததே இங்கிருக்கும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான். சட்டத்தை மீறி வனப் பகுதியில், வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் அனுமதியின்றி கட்டப் பட்டுள்ள யார்கோல் அணையை நிச்சயம் இடித்தே தீர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago