திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 100 சதவீத திறனுடன் இயங்கத் தொடங்கி உள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள், ரயில்கள் மூலம் திருப்பூருக்கு திரும்பி வருகின்றனர். திருப்பூர் ரயில் நிலையத்திலேயே இவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாள்தோறும் பல்வேறு வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கரோனா பரிசோதனைக்கு பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை 2,500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், டெல்லியை சேர்ந்த 30 முதல் 35 வயது வரை உள்ள 3 பனியன் தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களது முகவரி மற்றும் அலைபேசி எண்கள், நிறுவனங்களின் பெயர்களை பரிசோதனையின்போது அதிகாரிகள் வாங்கி வைத்திருந்தனர்.
இதனால் அவர்களை தொடர்பு கொண்டு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை தெரிவித்து, அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர். தொடர்புடைய நிறுவனங்களுக்கும், இதுதொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago