திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில், பக்தர்கள் அமாவாசைக்கு முதல் நாள் இரவே வந்து தங்கி, அமாவாசையன்று கோயில் தெப்பக் குளத்தில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நாளை (ஜூலை 9) அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூருக்கு வந்தால், கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.
இதை தவிர்க்கும் விதமாக அமாவாசையின் முதல் நாளான இன்று (ஜூலை 8) மதியம் 12 மணி முதல் நாளை இரவு வரை பக்தர்கள் தரிசனத்தை கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி முதல் தெப்பக்குள வாயில்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago