வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் விழுப்புரத்தில் தனது பிரமாண்டமான ஷோரூமை திறக்கிறது.
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் மிகவும் நம்பகமான முன்னணி ஜூவல்லரி நிறுவனம் ஆகும். 55 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தம் புது டிசைன்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ராசிக்கற்கள் உள்ளிட்ட அனைத்து வித நகைகளையும், அனைத்து தரப்பு வயதினரின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து வழங்கி வருகிறது.
விழுப்புரம் புதிய ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் மகிழும் வண்ணம் அசத்தலான பல சலுகைகளை அறிவித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.50 குறைவாக (VA 7%க்கும் குறைவான நகைகளுக்கு பொருந்தாது) பெறலாம். பழைய தங்க நகை எக்ஸ்சேஞ்சின் மீது ஒரு கிராமுக்கு ரூ.50 கூடுதலாக பெறலாம். வைரம் ஒரு காரட்டுக்கு ரூ. 5000 தள்ளுபடி, வெள்ளிப் பொருட்களின் செய்கூலியில் 25% குறைவு மற்றும் வெள்ளி நகைகளின் அதிகபட்ச விலை மீது 10% குறைவாக வாங்கி மகிழலாம். இந்த சலுகைகள் 8 ஆகஸ்ட் 2021 வரை மட்டுமே பொருந்தும்.
இதுதொடர்பாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். அனந்த பத்மநாபன் கூறுகையில், "எங்களின் புதிய விழுப்புரம் ஜி ஆர்டி ஷோரூம் மூலம் இப்போது வாடிக்கையாளர்களை நெருங்கி வந்துள்ளோம். வாடிக்கையாளர்களின் திருப்தியும், மனநிறைவு மட்டுமே எங்களுக்கு பிரதானம். வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழும் வகையில் பிரத்யேகமான பல ஆஃபர்களுடன் தொடக்க விழா சலுகைகளை அறிவித்துள்ளோம். ஆகவே இச்சலுகைகளை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்” என குறிப்பிட்டார்.
மேலும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அதிநவீன வசதிகளுடன் புதிதாக விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள ஜிஆர்டி ஷோரூமில், லேட்டஸ்ட் டிசைன்களின் ஏராளமான ஆபரண கலெக்ஷன்கள் உள்ளன. அனைவரும் எளிதில் அணுகும் வகையில் ஷோரூம் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவ ருக்கும் திருப்திகரமான ஷாப்பிங் அனுபவம் கிடைக்கும்.
எங்களின் தொடக்க விழா சலுகைகளுடன், வாடிக் கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பரிசோதனைகளை உறுதிப்படுத்தியுள்ளோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago