‘ஒலிம்பிக்கில் பங்கேற்க தமிழக வீரர்கள் 11 பேர் தேர்வானது வரலாற்று சாதனை’ :

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை தமிழக சுற்றுச்சூழல், இளைஞர் நலம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 11 வீரர்கள் தேர்வாகி இருப்பது வரலாற்று சாதனை ஆகும்.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் கால்பந்து மைதானம், ஹாக்கி மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் அதிர்ஷ்ட அந்தோனிராஜ், வட்டாட்சியர் பாலசுப்பிர மணியன், மாவட்ட தடகள கழக தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியோர் உடனிருந்தனர்.

சிந்தடிக் மைதானம்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.6.14 கோடியில் கட்டப் படும் உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று மாலை ஆய்வு செய்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:

சென்னையில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படும். திருப்பூரில் ரூ.9 கோடியில் சிந்தடிக் டிராக் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், தஞ்சாவூர், திரு வாரூர், கோவை ஆகிய இடங் களில் உலகத் தரம் வாய்ந்த சிந்தடிக் மைதானம் அமைக் கப்படும் என்றார்.

ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE