திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி அடுத்த விஜிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (40). இவர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அம் மனுவில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வாணியம்பாடியைச் சேர்ந்த நிலோபர் கபீல் மற்றும் அவரது உதவியாளரான பிரகாசம் என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.5 லட்சம் பணத்தை நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்தேன்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் பணத்தை பெற்ற முன்னாள் அமைச்சரும், அவரது உதவியாளரும் இதுவரைஎனக்கு வேலை வாங்கித் தரவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நான் கொடுத்த பணத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என குறிப்பிட்டி ருந்தார்.
இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கத்துக்கு எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் ரூ.6 கோடி வரை பணத்தை பெற்று ஏமாற்றி விட்டதாக அவரது உதவியாளர் பிரகாசம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில், அதிமுகவில் இருந்து நிலோபர்கபீல் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago