ஆரணியில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆரணி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எ.பி.கண்ணா, மாவட்ட துணை ஆளுநர் கே.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். ஆரணி ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.கோபிநாத், செயலாளராக என்.பாபு, பொருளாளராக எம்.மோகன்குமார் ஆகியோர் பொறுப்பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஏழை பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
நகராட்சி சித்த மருத்துவர் சங்கரியிடம் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க 5,000 தேநீர் கப்புகளை வழங்கினர், மேலும், பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு இலவச நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago