கல்விக் கட்டண வசூல் தொடர்பாக - அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

பல்வேறு பிரச்சினைகளுக்காக, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

நல்லூர் நுகர்வோர் நல மன்றம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "திருப்பூர் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளி மற்றும் பிரைமரி பள்ளிகள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு மெட்ரிக் பள்ளியிலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் படிக்கின்றனர். கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டாக பள்ளிகள் செயல்படவில்லை. இந்நிலையில், அலைபேசி வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வசதி இல்லாத, அலைபேசி வாங்க முடியாத ஏழை குழந்தைகள் படிக்க முடியாமல் உள்ளனர். ஆனால், ஏழை குழந்தைகளின் பெற்றோரிடம் கட்டணங்களை முழுமையாக செலுத்துமாறு மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்துகின்றன. செலுத்த தவறினால், இந்த ஆண்டு உங்கள் குழந்தைகள் தேர்ச்சி பெற முடியாது என கண்டிப்புடன் கூறுகிறார்கள். இதனால், பெற்றோர் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் கல்விக் கட்டணம் என்கிற பெயரில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கின்றன. எனவே, அனைத்து பள்ளிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்