மாவில் ஆந்திரா வகை புழு தாக்குதல் தொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் மாவிவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் மற்றும் பூச்சி தாக்குதல், கரோனா ஊரடங்கு உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மா மரங்களில் உள்ள காய் களில் புதிய வகை புழுத் தாக்குதல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்த விவசாயிகள், மாவட்ட தோட்டகலைத் துறை அலுவலர் களிடம் தகவல் தெரிவித்தனர். போச்சம்பள்ளி அருகே என்.தட்டக்கல் கிராமத்தில் தோட்டக்கலைத்துறையினர் மற்றும் பெங்களூரு, கோவை, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு மேற் கொண்டனர்.
அப்போது மாங்காய்களை ஆந்திரா வகை புழுக்கள் தாக்கி உள்ளதால், அதனை ஆய்விற்கு எடுத்துச் சென்றனர். ஒரு சில நாட்களில் ஆய்வறிக்கை வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தும் இதுவரை வழங்கப் படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேஆர்பி அணை உபரிநீர் நீட்டிப்பு இடதுபுறக்கால்வாய் (பாளேகுளி முதல் சந்தூர் ஏரி வரை பயன்பெறுவோர் சங்கம்) தலைவர் சிவகுரு கூறும்போது, ஆந்திரா புழு தாக்குதல்தொடர்பாக இதுவரை ஆய் வறிக்கை வழங்கப்படவில்லை. பூச்சி தாக்குதலுக்கு உரிய காரணம் தெரிவித்தால் தான் எதிர்வரும் ஆண்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
நெல், கரும்பு உள்ளிட்ட வைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதைப் போல் மாவிற்கும் ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நிகழாண்டில் இழப்பினை சந்தித்துள்ள மாவிவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கும், வேளாண்மைத் துறை அமைச்சருக்கு கோரிக்கை அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago