ஆட்டோ மோதி இளைஞர் உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

அரகண்டநல்லூர் அருகே வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் சந்தோஷ் (28). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சந்தோஷ் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் அந்தப் பெண்ணின் 13 வயது தம்பியுடன் இருசக்கர வாகனம் ஒன்றில் சென்றார். எதிரே வந்த ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். நேற்று காலை உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, அந்த ஊரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை யால் அடிக்கடி இதுபோன்ற விபத்து ஏற்படுகிறது. எனவே இக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமென்று அக்கிராம மக்கள்நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் அங்கு வந்து தற்காலிகமாக கடையை மூடவும், வேறு இடத்திற்கு கடையை மாற்றவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதன் பேரில் கிராமத்தினர் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்