தென்பெண்ணை ஆற்றுக்கு வரும் தண்ணீரை குழாய் மூலம் யார்கோல் அணையில் நிரப்ப கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது என எம்பி செல்லக்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே, யார்கோல் என்னுமிடத்தில் கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது.
இதுதொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றம் நடுவர் மன்றத்துக்கு அனுப்பப் பட்டு உடனடியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனக் கூறியதை, கடந்த அதிமுக ஆட்சிகண்காணிக்க தவறியதன் காரணமாக கரோனா காலத்தில் அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அணை கட்டுவதற்கான மூலப்பொருட்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்துதான் பெரும்பாலான பொருட்கள் அங்கே சென்றிருக் கிறது என்பது வேதனையான விஷயம்.
கெலவரப்பள்ளி அணைக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்து நீரையும் குழாய் மூலம் இந்த அணையில் நிரப்ப கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் எந்த தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றிற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான குவாரிகளை கர்நாடகாவைச் சேர்ந்தவர் களின் கட்டுப் பாட்டில் உள்ளது. அதனால் இங்கிருக்கும் இயற்கை வளங்களை கர்நாடகா மாநிலத் திற்கு கொண்டு போய் சேர்க்கின்றனர். அதனால் பெரும்பாலான இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, நீர் ஆதாரங்களும் அழிக்கப் படுகிறது.
கர்நாடகா அரசு கட்டியுள்ள யார்கோல் அணையில் மதகுகள் அமைத்து, தமிழகத் திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை வழங்க, மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவாதம் தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago