புதுக்கோட்டை மாவட்டம் திரு வரங்குளம் அருகே பொற்பனைக் கோட்டை பகுதியில் அகழாய்வு செய்வது குறித்து ஆட்சியருடன் தொல்லியல் ஆய்வாளர்கள் நேற்று முன்தினம் இரவு ஆலோ சனை செய்தனர்.
சங்ககால தொன்மை மிக்க இடமான பொற்பனைக்கோட்டை யில் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், கோட்டை, கொத்தளங்கள், அகழிகள் உள்ளன. கோட்டை சுவரில் 4 இடங்களில் வாசல்கள், எலும்புத் துண்டுகள் உள்ளதுடன், பல்வேறு இரும்பு உருக்கு ஆலைகளும் இருந்திருப்பதை அறிய முடிகிறது. இவ்விடத்தை அரசு அகழாய்வு செய்ய வேண் டும் என தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் அரசுக்கு 2 ஆண்டு களுக்கும் முன்பே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இ.இனியனும் கள ஆய்வு செய்தார். பின்னர், இவரது, ஆய்வறிக்கையோடு பல்கலைக்கழகத்தின் கோரிக்கை யின் அடிப்படையில் அகழாய்வு பணிக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி அளித்தது. மேலும், அகழாய்வு பணிகளை தொடங்குவதற்கு ரூ.1 லட்சம் நிதியும் பல்கலைக்கழகம் ஒதுக்கி யுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவுடன் நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவ லகத்தில் பேராசிரியர் இனியன், தொல்லியல் ஆய்வுக் கழகத் தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராஜேந்திரன் உள் ளிட்டோர் ஆலோசனை மேற் கொண்டனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியது: பொற் பனைக்கோட்டையில் 5 இடங் களில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வி டங்களை தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்கேன் செய்து, உள்ளே இருக்கும் கட்டுமானங்களை ஒலி எதிரொலித்தல் அடிப்படையில் அடையாளம் காணப்படும். உள்ளே இருக்கும் பொருட்களை முப்பரிமாண தோற்றத்தில் பெறப் படும். இவற்றின் அடிப்படையில், எந்த இடத்தில் அகழாய்வு தேவை என்பதை அறிந்து பேராசிரியர் இனியன் தலைமையில் பணிகள் தொடங்க உள்ளன என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago