வந்தவாசி அருகே சாலை விபத்தில் - ஓட்டுநர் உட்பட 15 பேர் படுகாயம் : காவல் துறையினர் விசாரணை

By செய்திப்பிரிவு

வந்தவாசி அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட 15 பெண் தொழிலாளர்கள் படுகாய மடைந்தனர்.

தி.மலை மாவட்டம் வந்தவாசி மற்றும் கீழ்சாத்த மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள், செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்கின்றனர். இவர்கள், அனைவரும் தனியார் நிறுவனத்தின் வேன் மூலம் பணிக்கு சென்று வருகின்றனர்.

அதன்படி, நேற்று முன் தினம் நள்ளிரவு பெண்கள் தங்களது பணியை முடித்துக் கொண்டு வேன் மூலமாக வீடு திரும்பினர்.

வந்தவாசி – காஞ்சிபுரம் நெடுஞ் சாலையில் உள்ள அய்யாவாடி கூட்டுச் சாலை அருகே வந்து கொண்டிருந்த போது, வந்தவாசி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியுடன் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளானது. லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.

இந்த விபத்தில் ஓட்டுநர் லோகநாதன் மற்றும் வேனில் பயணம் செய்த 15 பெண் தொழிலாளர்கள் படுகாய மடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் சிக்கி படுகாய மடைந்த பெண் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

4 பேருக்கு தீவிர சிகிச்சை

பின்னர் மேல் சிகிச்சைக் காக, ஓட்டுநர் லோகநாதன், ரேகா, நதியா, முத்துலட்சுமி ஆகிய 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வந்தவாசி வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சென்னை செங்குன்றம் பகுதியில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ஓம்பிரகாஷை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்