ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் வங்கதேசத்தினர் விசா இல்லாமல் முறைகேடாக தங்கியுள்ளார்களா? என மத்திய புலனாய்வு பிரிவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கடலூரில் போலி ஆவணங்களு டன் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேரை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள், போலியான ஆவணங்களை பயன்படுத்தி தங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் போலி ஆவணங்களுடன் தங்கியுள்ள வங்கதேசத்தினர் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள் ளது. அதன்படி, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அதிகப்படி யான வங்கதேசத்தினர் சிகிச்சைக் காக வந்து செல்கின்றனர். அதேபோல், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் மேல்விஷாரம் போன்ற பகுதிகளில் உள்ள தோல் தொழிற் சாலைகளில் வங்கதேசத்தினர் முறைகேடாக தங்கி தோல் தொழிற் சாலைகளில் தொழிலாளர்களாக தங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையடுத்து, முறையான விசா இல்லாமல் போலி ஆவணங்களுடன் வங்கதேசத் தினர் யாராவது தங்கியுள்ளார்களா? என மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் மத மோதல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் வேலூர் காந்திரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் தோல் தொழிற்சாலை தொழிலாளர்களின் விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago