நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயோ-டீசலாக மறுசுழற்சி செய்யும் திட்டத்தை, மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று தொடங்கி வைத்தார். 10 உணவகங்களை சேர்ந்த உரிமையாளர்களிடம் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரிப்பதற்கான கேன்களை ஆட்சியர் வழங்கினார்.
அதன் பின்னர் ஆட்சியர் கூறும்போது ‘‘மாவட்டங்களில் செயல்பட்டு வரும் உணவகங்களில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து எத்தனால் உடன் சேர்த்து, பயோ-டீசலாக உருவாக்குவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பலமுறை சூடு செய்து பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயால் மக்களுக்கு ஏற்படும் ரத்தக் கொதிப்பு, இருதயம் மற்றும் கல்லீரல் பாதிப்புகளை தவிர்க்க முடியும்’’ என்றார்.
உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago