பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலையை கட்டுப்படுத்தக் கோரியும் ஈரோடு மாவட்ட தேமுதிக சார்பில் வீரப்பன் சத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமை வகித்தார். மாநில தொண்டர் அணி செயலாளர் கணேசன் பங்கேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ், மின்சாரம், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பரசன், மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், மாநகர செயலாளர் ராமசாமிரெட்டி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில இளைஞர் அணி துணை செயலாளரும், நடிகருமான எம்.வி.எஸ்.ராஜேந்திரநாத் கண்டன உரை ஆற்றினார். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
தருமபுரி
தருமபுரி நகரில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில அவைத்தலைவர் மருத்துவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தருமபுரி நகர செயலாளர் பாண்டியன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர்கள் குமார்(மேற்கு), விஜயசங்கர் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாநில கேப்டன் மன்ற துணைச் செயலாளர் மாரிமுத்து, மாநில தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் விஜய் வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago