பெட்ரோல் விலை உயர்வு: தேமுதிக ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல் செங்கல்பட்டில் அனகை முருகேசன் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு, அத்திவாசியப் பொருட்கள் விலை உயர்வால்பொதுமக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் அருகே நடைபெற்றஆர்ப்பாட்டத்தில், தேமுதிகதுணைச் செயலாளர் ப. பார்த்தசாரதி, திருவள்ளூர் மேற்கு மற்றும்கிழக்கு, ஆவடி மாநகர மாவட்டசெயலாளர்களான டி.கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.டில்லி, நா.மு.சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும் எனவும் கோரிக்கை முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்