தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டி உள்ளது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து நேற்று விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன் தலைமையிலான விவசாயிகள், ஆட்சியர் அலுவலக நுழை வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, ஆட்சியர் மோகனிடம் மனு அளிக்க கூறினர்.
இதனையடுத்து விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பது:
1892-ம் ஆண்டு மைசூர் சமஸ்தானத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையிலான ஒப்பந்தப்படி தடுப்பணைகள், பாசன திட்டங் களை தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றக் கூடாது. இதன் அடிப்படையில் தமிழக அரசு, விவசாயிகளின் வாழ் வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago