தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் ஒன்றை, திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருநங்கைகளின் நலன் மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் சத்யா அளித்த மனுவில் தெரிவித்துள்ளது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு, புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளில் ஒன்றை, திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்தால், அதில் சிற்றுண்டி கடை நடத்தி திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாற்றிக் கொள்வோம்.
திருநங்கைகள் பிறரிடம் கையேந்தி பணம் வசூல் செய்யும் செயலை விட்டுவிட்டு, கவுரவமாக வாழ்ந்து வருகிறோம். எங்களது அறக்கட்டளையின் கீழ் பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சிற்றுண்டி கடை நடத்த புதிதாக கட்டப்பட்ட கடைகளில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago