பொக்லைன்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவட்டத்தில் 6 பொக்லைன்கள் மற்றும் ரிக் உடன் இணைக்கப்பட்ட ஒரு போர்வெல் வாகனம் என 7 வாகனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வாகன வரியை செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்