திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் 4 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன.
கரோனா 2-வது அலை அதிக அளவில் பரவியதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டனர். உயிரி ழப்பும் அதிகரித்ததால் திருப் பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சித்த முறைப்படி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 வட்டங்களில் சித்தா சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன.
இங்கு, கரோனா தொற்று ஆரம்பக்கட்டத்தில் உள்ளவர் களுக்கு இயற்கை முறைப்படி, பாரம்பரிய உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் கரோனா நோயாளிகள் விரைவாக குணமடைந்து வீடு திரும்பி வந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட 4 சித்தா சிறப்பு சிகிச்சை மையங்கள் மூலம் கரோனா 2-வது அலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதிக் கப்பட்டு அனைவரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து 25-க்கும் கீழாக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சித்தா சிறப்பு சிகிச்சை மையங்களை தற்காலிக மாக மூட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். அதன்படி, 4 சித்தா சிறப்பு சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago