‘இன்ட்கோ சர்வ்’ நிறுவனத்துக்குநியாய வர்த்தகச் சான்றிதழ் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் 30,000-க்கும் மேற்பட்ட சிறு தேயிலைவிவசாயிகள் அங்கம் வகிக்கும், நாட்டின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு இணையமான ‘இன்ட்கோசர்வ்’ நிறுவனத்தில், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உறுப்பினர்களாக உள்ளன.

இன்ட்கோசர்வ் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 14 மில்லியன் கிலோ தேயிலைத் தூளை உற்பத்தி செய்து, நீலகிரியின் பொருளாதார மேம்பாட்டுக்கும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில், இன்ட்கோசர்வ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜெர்மனி நாட்டின் பான் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், ‘ப்ளோசர்ட்’ நிறுவனம், இன்ட்கோசர்வ்-க்கு நியாய வர்த்தகச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்ட்கோசர்வ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ இச்சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் உடனிருந்தனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்