கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் - புதிதாக 211 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் : சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்புநடவடிக்கைகள் குறித்து அமைச் சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். டிஆர்விஎஸ்.ரமேஷ் எம்பி, எம்எல்ஏக்கள் சபா.ராஜேந்திரன், கோ.ஐய்யப்பன், தி.வேல்முருகன், மா.செ.சிந்தனைசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது:

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு புதிதாக 211 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கரோனா சிகிச்சை மேற்கொள்ள நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அனைத்து துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதால் கரோனா பரவல் குறைந்துள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி முற்றிலுமாக தொற்றினை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்